உதவும் உள்ளம் கொண்ட ‘தீபிகா கருணை பவுண்டேசன்’ நிர்வாகிகள்: தலைவர் முத்துகிருஷ்ணன் செல்லப்பா

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்தவர் செல்லப்பா. 1965 காலக்கட்டத்தின்போது தமிழகம் மற்றும் கேரளம் ஆகிய பகுதிகளில் மழை தண்ணீர் இல்லாமல் பெரும் பஞ்சம் நிலவியது. அப்போதைய காலக்கட்டத்தில் தென்மாவட்ட மக்கள் அதிகமாக மும்பை பயணித்தனர்.அப்போதைய காலக்கட்டத்தில் மும்பைக்கு வந்தவர் செல்லப்பா.  மும்பை வந்த அவர் உணவகத்தில் பணியாற்றினார். மொழி தெரியாத காரணத்தினால் பல இன்னல்களை சந்தித்தார். மேலும் இரவும், பகலும் கடினமாக உழைத்து தன்னை வளர்த்துக் கொண்டதுடன், தன்னுடைய பொருளா தாரத்தை பெருக்கினார்.இந்த நிலையில், 1968ம் பெற்றோர்கள் செல்லப்பாவுக்கு பாலு என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். இந்த தம்பதிக்கு முத்துகிருஷ்ணன், முருகேஷ் ஆகிய இருமகன்களும், மீனா என்ற மகளும் உள்ளனர்.செல்லப்பா 1969-ம் ஆண்டு குடும்பத்துடன் மும்பை குடியேறினார். மும்பையில் தான் முன்பு பணியாற்றிய நிறுவனத்தில் மீண்டும் வேலைக்கு சேர்ந்தார். மூத்த மகன் முத்துகிருஷ்ணன், மீனா, முருகேஷ் ஆகியோர் மாநகராட்சி பள்ளியில் படித்துக் கொண்டிருந்தனர்.

இந்த சூழலில், தந்தை செல்லப்பாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி ஊயிரிழந்தார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தை வெகுவாக பாதித்தது. இந்த நிலையில், படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு குடும்ப பொறுப்பை ஏற்றுக் கொண்டு முத்துகிருஷ்ணன் வேலைக்கு செல்ல ஆரம்பித்தார்.சிறுவனாக இருந்தா லும், எந்த வேலையையும் செய்யத் தொடங்கினார். அதே நேரத்தில் தான் கஷ்டப்பட்டாலும், பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் அப்போதே இருந்தது. சாலையில் செல்பவர்களை யாரையாவது ஏழ்மையில் பார்த்தால் உடனடியாக வாகனத்தை, அவர்களுக்கு உணவு வழங்குவதும், பணம் கொடுப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.

இன்று ஓரளவிற்கு தன்னுடைய பொருளாதாரத்தை பெருக்கிக் கொண்ட அவர், நிதி நிறுவனம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களை செய்து வருகிறார். இவருக்கு 2003-ம் ஆண்டு அமுதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைப்பெற்றது. இவர்களுக்கு தீபிகா என்ற மகளும் உள்ளார்.

அவர் பெயரில் ’தீபிகா கருணை பவுண்டேசன்’ அறக்கட்டளையை நடத்தி வருகிறார். தன்னால் படிக்க முடியவில்லை என்ற ஏக்கம் இருந்து வருவதால், தங்களுடைய அறக்கட்டளை மூலம் படிக்க விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு படிப்புக்கான ஊக்கத்தொகையை வழங்கி வருகிறார். அவர் வசித்து வரும் பகுதியில் அவ்வப்போது மருத்துவ முகாம்களையும் நடத்தி வருகிறார்.

 இந்த அமைப்பின் மூலம் பண்டிகை காலங்களில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச சேலை, பாத்திரங்கள் வழங்கி வருகிறார். மேலும், சுயத் தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கி ஊக்குவிப்பதுடன், அவர்களுக்கு வாழ்வா தாரத்தையும் ஏற்படுத்தி கொடுத்து வருகிறார்கள்.தீபிகா கருணை பவுண்டேசன் தலைவர் முத்துகிருஷ்ணன், செயலாளர் மதியழகன், பொருளாளர் அர்ச்சனா மற்றும் நிர்வாகிகள் ரமேஷ், சுரேஷ், மீனா, சங்கர், நீலகண்டன் ஆகியோர் அறக்கட்டளையை திறம்பட நடத்தி வருகின்றனர். தலைவரை போன்று நிர்வாகிகளும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.இந்த அறக்கட்டளை நிர்வாகிகள் பாண்டுப் அருகே உள்ள குடிசைப்பகுதியில் வசித்து வரும் மக்களுடன் பல பண்டிகைகள் கொண்டாடி வருவதுடன் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகின்றனர்.நாங்குநேரியில் தங்கம்மன் கோவில் கட்டப்பட்டு வருகிறது. அதற்கு தேவையான நிதியை தனது நண்பர்களிடம் வசூலித்து அந்த பணத்தை கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்துள்ளார்.

Related Stories: