விருத்திமான் சாஹா தான் உலகின் சிறந்த விக்கெட் கீப்பராம்; சொல்கிறார் விராட்கோலி

விசாகப்பட்டினம்; இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணி முதலில் விளையாடிய டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. முதல் டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. இதில் விக்கெட் கீப்பராக இருந்த ரிஷப் பண்ட் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக விருத்திமான் சாஹா விக்கெட் கீப்பராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா என்று தெரிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு திடீரென டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு அறிவிப்புக்கு பின்னர் விருத்திமான் சாஹா தேர்வு செய்யப்பட்டார். காயம் காரணமாக அவ்வபோது அவதிபட்டு வந்தார்.

இந்நிலையில் விக்கெட் கீப்பராக இளம் வீரர் ரிஷப் பண்ட் அணியில் இடம் பிடித்தார். முதலில் அதிரடியாக ரிஷப் பண்ட் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஆனால் பின்னர் தனக்கு கிடைத்த வாய்ப்பினை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்நிலையில் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இருந்து ரிஷப் பண்ட் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக விருத்திமான் சாஹா விக்கெட் கீப்பராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் விராட் கோலி கூறுகையில், சாஹா தற்போது நல்ல உடற்தகுதியுடன் இருக்கிறார். அவர் இந்த தொடரில் விளையாடுகிறார். அவரது விக்கெட் கீப்பிங் எல்லோரும் பார்க்க வேண்டும் என்றும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். காயம் காரணமாக அவர் விளையாடாமல் இருந்தது துரதிருஷ்டம். என்னைப் பொறுத்தவரை அவர்தான் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் என தெரிவித்தார்.

Related Stories: