வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

நெல்லை: வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி: குற்றாலத்தில் இந்தாண்டு சீசன் காலம் முடிவடைந்த நிலையிலும் செப்டம்பர் மாதத்திலும் சாரல் நன்றாக பெய்து வருகிறது. இதன் காரணமாக அருவிகளில் தண்ணீர் தொடர்ந்து விழுகிறது. நேற்று பகல் முழுவதும் இதமான சூழலுடன் அவ்வப்போது சாரல் பெய்த நிலையில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டே இருந்தது.

இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மெயின் அருவியில் நேற்று மதியம் 2 மணி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் மாலையில் பழைய குற்றால அருவியிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனிடையே நேற்று இரவு முழுவதும் பெய்த மழையினால் வெள்ளப்பெருக்கு குறையாத காரணத்தால்  அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். நீர்வரத்து குறைந்த பிறகு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: