ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிக்கு துபாயில் இருந்து வரவழைக்கப்பட்டது பீனிக்ஸ் பறவை இறக்கை வடிவம்

சென்னை: ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிக்கு துபாயில் இருந்து பீனிக்ஸ் பறவை இறக்கையின் வடிவம் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது இறக்கையை இணைக்கும் பணி நடந்து வருகிறது. டிசம்பருக்குள் கட்டுமான பணிகள் முழுவதையும் முடித்து அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிக்கு 50.08 கோடி நிதி ஒதுக்கப்ப்டுள்ளது. கட்டுமான பணிக்கு ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. மெரீனா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் அமைக்கப்படும் கட்டுமான பணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்தாண்டு மே 7ம் தேதி அடிக்கல் நாட்டினார். கட்டுமான பணியில் 10 பகுதி வேலையில் 8 பகுதி வேலை முடிக்கப்பட்டுள்ளது. மெயின் கட்டிடத்தில் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தில் சூப்பர் ஸ்டெக்சர் வடிவமைப்பு மட்டும் அமைக்கப்படுகிறது.

நெருப்பாற்றை நீந்திக் கடக்கும் பீனிக்ஸ் பறவை தோற்றம் 15 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுகிறது. இறக்கை மட்டும் 2 பக்கமும் 21 மீட்டர் வரை அமைக்கப்படுகிறது. இப்பணிக்கு ஐஐடி நிபுணர்கள் ஸ்டெக்சுரல் வடிவமைப்பு செய்து கொடுத்துள்ளனர். அந்த கட்டுமான பணிகள் மட்டும் பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராஜா மோகன் தலைமையில் ஐஐடி நிபுணர்களின் மேற்பார்வையில் அமைக்கப்படுகிறது.

தற்போது பீனிக்ஸ் பறவை இறக்கைக்கான ேஹண்டில் லீவர் (நெடுங்கை போன்ற அமைப்பு) எந்த வித தாங்கும் திறன் இல்லாமல் 26 மீட்டர் அமைக்கப்படுகிறது. இதற்காக, ஹேண்டில் லீவர் துபாயில் இருந்து கப்பல் மூலம் வரவழைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு கொண்டு வரப்பட்டுள்ள ேஹண்டில் லீவரை இணைக்கும் பணி கும்மிப்பூண்டியில் நடந்து வருகிறது. அங்கு ஒருங்கிணைக்கப்பட்ட பிறகு நினைவிடத்தில் பொருத்தப்படுகிறது. 70 சதவீதம் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது. வரும் டிசம்பருக்குள் பணிகளை முடித்து, செய்தி மக்கள் தொடர்புத்துறையிடம் ஒப்படைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: