இந்தியாவில் பாலியல் கல்வி அவசியம் டாக்டர் ஜெயராணி காமராஜ் வலியுறுத்தல்

சென்னை : ‘‘இந்தியாவில் பலியல் கல்வி அனைவருக்கும் அவசியம்” என்று பிரபல பாலியல் சிகிச்சை நிபுணர்கள் கே.எஸ்.ஜெயராணி காமராஜ், டி.காமராஜ்   ஆகியோர் உலக பாலியல் ஆரோக்கிய தினத்தையொட்டி வடபழனி ஆகாஷ் மருத்துவனையில் நடந்த கருத்தரங்கில் வலியுறுத்தியுள்ளனர். இந்தியாவிலேயே  முதலாவதாக குழந்தையின்மை சிகிச்சைகென்றே அனைத்து நவீன உள்கட்டமைப்புகளுடனும், மருத்துவ உபகரணங்களுடனும் தொடங்கப்பட்டது வடபழனியில் உள்ள ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையம் மற்றும் மருத்துவனை. இதன் இயக்குநர்கள் பேராசிரியர் டி.காமராஜ், ஜெயராணி காமராஜ் ஆகியோர் குழந்தையின்மை சிகிச்சையில் உலகளவில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.கர்பப்பை இல்லாத ஓமன் நாட்டை சேர்ந்த சாமியா அலி (65) என்ற பெண்ணுக்கு நவீன சிகிச்சை மூலம் கர்ப்பப்பையை உருவாக்கி குழந்தை பேறு கிடைக்க செய்து உலக சாதனை படைத்துள்ளனர். இதன் இயக்குனர் ஜெயராணி காமராஜ் உலக பாலியல் மருத்துவர்கள் சங்க மீடியா குழு தலைவராகவும் டாக்டர் டி.காமராஜ் உலக பாலியல் உரிமைகள் குழு உறுப்பினராகவும் உள்ளார். உலக பாலியல் ஆரோக்கிய தினத்தையொட்டி சென்னையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் செக்சுவல் மெடிசின் அமைப்பும்,  ஆகாஷ் மருத்துவனையும், காமராஜ் மருத்துவனையும் இணைந்து அனைவருக்கும்  பாலியல் கல்வி அவசியம் குறித்து கருத்தரங்கை கடந்த 7 நாட்களாக நடத்தினர். கருத்தரங்கை தொடங்கி வைத்து காமராஜ் ஜெயராணி காமராஜ் பேசியதாவது:

எல்லா உயிரினங்களுக்கும் பாலியல் உணர்வு உண்டு. இது எல்லோருக்கும் பொதுவானது. ஆரோக்கியத்துடன் வாழ்ந்தால் பாலியலில் குறைபாடு ஏற்படாது. தாம்பத்திய உறவு குறைபாடுகளால் தம்பதிகளுக்குள் கருத்து  வேறுபாடு ஏற்பட்டு விவகாரத்து வரை சென்று விடுகிறது. பாலியலில் போதிய அறிவும், விழிப்புணர்வும் இல்லாததால் தான் இந்தியாவில் பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்தியாவில் உடல் ஊனமுற்றவர்கள், பிறவிக்குறைபாடு உள்ளவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள் தங்களது பெற்றோர்களுக்கு பாலியலில்  போதிய விழிப்புணர்வு இல்லாததாலும் அலட்சியப் போக்கினாலும் இந்த நிலைக்கு ஆளானவர்கள்.

மரபு வழியாக குறைபாடுகள் பெற்றோருக்கு இருந்தாலும் அவர்களது ரத்த தொடர்புடைய நெருங்கிய உறவினர்கள் யாருக்கேனும் இத்தகைய குறைபாடுகள் இருந்தாலும் பிறக்கும் குழந்தைகளுக்கும் அத்தகைய பாதிப்புகள் வர வாய்ப்புகள் உள்ளன ஆதாலால் பாரம்பரிய குறைபாடு உள்ளவர்கள் உறவினர்களை திருமணம் செய்து கொள்ள கூடாது. இதற்கு பாலியலில் போதிய விழிப்புணர்வும், அறிவும் தேவை. ‘‘பொதுவாக இந்தியாவில் அனைவருக்கும் பாலியல் கல்வி அவசியம் தேவை’’ என்றும் அவர்கள் பேசினார்கள். முடிவில் டாக்டர் நிவேதிதா ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார். கருத்தரங்கில் பங்கேற்ற 200க்கும் மேற்பட்ட தம்பதியினருக்கு பாலியல் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

Related Stories: