செயின்ட் லூசியா: கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடரில், சோயிப் மாலிக் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணி தொடர்ச்சியாக 7வது வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது.டேரன் சம்மி தேசிய ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் செயின்ட் லூசியா ஸூக்ஸ் - கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் மோதின. டாசில் வென்று பேட் செய்த ஸூக்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன் குவித்தது. கோலின் கிராண்ட்ஹோம் 65 ரன் (37 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்), இங்ராம் 25, பார்ன்வெல் 23, பிளெட்சர் 18 ரன் எடுத்தனர்.கயானா பந்துவீச்சில் லாப்ளின் 3, இம்ரான் தாஹிர் 2, ஷெப்பர்டு 1 விக்கெட் வீழ்த்தினர்.