விசாகப்பட்டணம்: இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் - தென் ஆப்ரிக்கா மோதும் 3 நாள் பயிற்சி ஆட்டம், விசாகப்பட்டணத்தில் இன்று தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணி முதலில் விளையாடிய டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. முதல் டெஸ்ட் விசாகப்பட்டணத்தில் அக்டோபர் 2ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு பயிற்சி பெறும் வகையில் தென் ஆப்ரிக்க அணி, ரோகித் ஷர்மா தலைமையிலான கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் அணியுடன் 3 நாள் போட்டியில் மோதுகிறது. இந்த போட்டி விஜயநகரம், ஆந்திர கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று காலை 9.30க்கு தொடங்குகிறது.