ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் எந்த இடத்தில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது: கபில் சிபில் வாதம்

டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் எந்த இடத்தில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது என்று தெரிவிக்குமாறு கபில் சிபில் வலியுறுத்தியுள்ளார். அந்நிய முதலீடு செய்ய சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோத பரிவர்த்தனை எப்படி நடக்கும்? ஐ.என்.எக்ஸ் வழக்கில் பணம் கையாடல் நடைபெறவில்லை, மாறாக முதலீடு தான் வந்துள்ளது என்று ப.சிதம்பரம் வழக்கறிஞர் கபில் சிபில் தனது வாதத்தில் தெரிவித்துள்ளார். ப.சிதம்பரம் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்த்தில் நடைபெற்று வருகிறது.

Related Stories: