கொல்லிமலை அடிவாரத்தில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது

சேந்தமங்கலம்: காளப்பநாயக்கன்பட்டி அடுத்துள்ள நிமித்திராயன்மேடு பகுதியை சேர்ந்தவர் வருதராஜன்(70), ஓய்வு பெற்ற தாசில்தார். இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம், கொல்லிமலை அடிவார பகுதியில் உள்ளது. அங்கு தொழிலாளர்கள் விவசாய வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தோட்டத்திற்குள் 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்துகொண்டிருந்தது. இதை பார்த்த அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள், நாமக்கல் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். வனசரகர் ரவிச்சந்திரன் தலைமையில் வனக்காப்பாளர் மாதேஸ்வரன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் விரைந்து சென்று மலைப்பாம்பை பிடித்து, கொல்லிமலை 20வது கொண்டை ஊசி வளைவிலுள்ள காப்பு காட்டில் விட்டனர்.

Related Stories: