கூட்டணி ஆட்சி அமைப்பதில் இழுபறி அரசியல் கட்சி தலைவர்களுடன் இஸ்ரேல் அதிபர் சமரச முயற்சி

ஜெருசலம்: இஸ்ரேல் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணி ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காண்பது தொட்ரபாக, அரசியல் கட்சிகளுடன் அதிபர் ரீவன் ரிவ்லின் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளார். இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு கடந்த வாரம் 2வது முறையாக நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 120 உறுப்பினர்கள் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பென்னி கன்ட்ஸின் ப்ளூ அண்ட் ஒயிட் கட்சி 33 இடங்களை பிடித்தது. பிரதமர் நெதன்யாகுவின் கர்சர்வேட்டிவ் லிகுட் கட்சி 31 இடங்களில் வென்றது. இந்த கட்சிகளின் வழக்கமான கூட்டணி கட்சிகளை சேர்த்தாலும், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் இல்லை. இதனால், எதிரணியைச் சேர்ந்த இரு முக்கிய கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கூட்டணி ஆட்சி பற்றி பேச பென்னி கன்ட்ஸ்க்கு பிரதமர் நெதன்யாகு அழைப்பு விடுத்தார். ஆனால், கூட்டணி ஆட்சியில் அதிக இடங்களை வென்ற நான்தான் பிரதமர் ஆவேன் என பென்னி கன்ட்ஸ் கூறியுள்ளார்.

பிரதமர் பதவியை விட்டுக் கொடுக்க நெதன்யாகு தயங்குகிறார். இவரது கூட்டணியில் மொத்தம் 55 எம்.பி.க்கள் உள்ளனர். 13 இடங்களில் வென்றுள்ள அரபு கட்சிகள், 3வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த கட்சி பென்னி கன்ட்ஸ்க்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் அரசில் இதுவரை அரபு கட்சிகள் இடம் பெற்றதில்லை. ப்ளூ அண்ட் ஒயிட் கட்சியும், கன்சர்வேட்டிவ் லிகுட் கட்சியும் கூட்டணி ஆட்சி அமைத்தால் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வோம் என அரபு கட்சிகளின் தலைவர் அய்மன் ஒதா தெரிவித்துள்ளார். கூட்டணி அரசு அமைப்பதில் அரசியல் கட்சிகளுக்குள் உடன்பாடு ஏற்படாததால், இப்பிர்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்களுடன் இஸ்ரேல் அதிபர் ரிவ்லின் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கியுள்ளார்.

Related Stories: