விநாயகபுரம் பஸ் நிலையத்தில் மழைநீர் தேக்கம்; மக்கள் அவதி

புழல்: விநாயகபுரம் பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்குவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். புழல் அடுத்த விநாயகபுரம் பகுதியில் மாநகர போக்குவரத்து பஸ் நிலையம் உள்ளது.  இந்த வளாகத்தில் புழல் புறக்காவல் நிலையம் மற்றும் அம்மா உணவகம் உள்ளது. இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் விநாயகபுரம், கல்பாளையம், புத்தகரம், பத்மாவதி நகர், கட்டிட தொழிலாளர்கள் நகர், பரிமளம் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் வேலைக்கு செல்லும்போது, தங்களது சைக்கிள்களை இந்த பஸ் நிலையத்தில்  நிறுத்திவிட்டு  செல்கின்றனர்.

Advertising
Advertising

இதனால், பஸ்கள் உள்ளே வந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் பஸ் நிலையத்தில் கழிவறை, மின்விளக்கு, இருக்கைகள் மற்றும் மேற்கூரை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.  இதனால்  பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் லேசான மழைக்கே பஸ் நிலைய வளாகத்தில் ஆங்காங்கே குளம் போல் தண்ணீர் தேங்குகிறது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: