மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவது நாகரீகமற்றது, மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றம்

டெல்லி: மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவது நாகரீகமற்றது, மனிதத் தன்மையற்றது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் மனிதக் கழிவுகளை அள்ளும் போது நாள்தோறும் இறக்க நேரிடுவதை தடுக்க அரசு தவறிவிட்டது எனவும் தெரிவித்துள்ளது. மனிதக்கழிவுகளை மனிதர்கள் அள்ள தடை விதிக்கக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மலக்குழிகளால் மட்டும் மனிதர்கள் இறக்கவில்லை. குண்டும் குழியுமான சாலையாலும் இறப்பு நேரிடுகிறது என மத்திய அரசு பதில் தெரிவித்துள்ளது.

Related Stories: