விமான நிலையத்தில் பரபரப்பு தங்க பிஸ்கட் கடத்தி வந்த கட்டிடக்கலைஞர் சிக்கினார்

சென்னை: கட்டுமான தொழில் பின்னடைவால் குருவியாக மாறிய கட்டுமான தொழிலில் ஈடுபட்டவர் தங்கம் கடத்தியதாக பிடிப்பட்டார்.ரியாத்தில் இருந்து இலங்கை வழியாக லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை 8.50 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  அப்போது உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து முகமதுஷாஆலம் (29) என்பவர் சுற்றுலா பயணியாக சென்றுவிட்டு விமானத்தில் சென்னை வந்தார். அவரிடம் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த நீங்கள் ரியாத்தில் இருந்து நேரடியாக டெல்லிக்கு செல்லாமல் இலங்கை வந்து அங்கிருந்து சென்னைக்கு ஏன் வந்தீர்கள் என்று கேட்டபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.இதையடுத்து அவரது உடமைகளை சோதனை நடத்தினர். உடமைகளில் எதுவும் இல்லை. அவர் டிஜிட்டல் ேரடியோ ஒன்றும் எல்இடி இரண்டு எமர்ஜென்ஸி லைட்டையும் கொண்டு வந்தார். ஆனால் அது வழக்கத்தை விட அதிக கனமாக  இருந்தது. அதை கழட்டிப்பார்க்க அதிகாரிகள் முயன்றனர். உடனே முகமது ஷா ஆலம் அதை தடுத்தார். என்னுடைய நண்பர் ஒருவருக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்காக நான் ரியாத் மார்க்கெட்டில் பலநாட்கள் தேடிப் பிடித்து வாங்கிவந்துள்ளேன்.  இதைஏன் கழட்டுகிறீர்கள் என கத்திக் கூச்சல் போட்டார்.

Advertising
Advertising

ஆனால் அதிகாரிகள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் ஒப்படைப்பதாக கூறி கழட்டிப் பார்த்தனர். முதலில் ஒரு விளக்கை கழட்டிப் பாத்தபோது அதன் உள்பகுதியில் இரண்டு தங்க பிஸ்கட்டுகள் இருந்தன. மற்றொரு விளக்கையும் கழட்டிப் பார்த்தனர். அதிலும் 2 தங்க பிஸ்கட்டுகள் இருந்தன. அதில் மொத்தம் 8 தங்க பிஸ்கட்டுகள் இருந்தன.  அதன் மொத்த எடை 815 கிராம். ரூ.32 லட்சம். விசாரணையில், முகமது ஷா ஆலம் உத்தரகாண்ட் மாநிலத்தில் கட்டிடக் கலை நிபுணராக பணியாற்றி வந்தார். தற்போது கட்டிடத்தொழில் நலிவடைந்ததால் வேறு வழியில்லாமல் கடத்தல்காரர்களிடம் குருவியாக செயல்படுகிறார் என்று  தெரியவந்தது. அவர் ஏற்கனவே இதேபோல் கடத்தில்வந்தாரா சென்னையில் யாருக்காக கடத்தி வந்தார் என்பது பற்றி தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Related Stories: