கோவையில் வீட்டிற்குள் புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி தடுக்க வந்த தொழிலாளிக்கு கத்திகுத்து

கோவை: கோவையில் வீடு புகுந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை தடுத்தவருக்கு கத்திக்குத்து விழுந்தது.   கோவை சுகுணாபுரம் அருகே நாகராஜபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவர் மகன் முரளி (26). கூலி தொழிலாளியான இவர் கஞ்சா போதைக்கு அடிமையாகி இருந்தார். இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்து தனியாக இருந்த மனநிலை பாதிக்கப்பட்ட 29 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.   உடனேஅந்த பெண் கூச்சலிட்டார். இதை கேட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் கூலி தொழிலாளி கண்ணன் (35) மற்றும் அவரது தாய் வேலாயி (60) ஆகியோர் அங்கே ெசன்று முரளியை தடுக்க முயன்றனர்.

Advertising
Advertising

ஆனால் முரளி கத்தியை காட்டி கண்ணன், வேலாயி ஆகியோரை மிரட்டி வெளியே செல்லுமாறு எச்சரித்தார். கண்ணன் வெளியே செல்ல மறுத்த போது முரளி அவரை கத்தியால் குத்தினார். இதனை தொடர்ந்து தப்பியோட முயன்ற முரளியை அக்கம் பக்கத்தினர் மடக்கி பிடித்து கை, கால்களை கட்டி வைத்து சரமாரியாக தாக்கி போத்தனுார் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் முரளியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த கண்ணன் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related Stories: