ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: வங்கதேச அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி

டெல்லி: இளையோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்தியா - வங்காளதேச அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில் அதற்கான இறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 32.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணி சார்பில் அதிக பட்சமாக கரண் லால் 37 ரன்களும் கேப்டன் துருவ் 33 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காள தேசம் அணி  101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனையடுத்து 7-வது முறையாக ஆசிய கோப்பையை இந்திய அணி தட்டி சென்றது. ஆசிய கோப்பை வென்றது.

Related Stories: