காஷ்மீரில் அத்துமீறி தாக்குதல் நடத்திய 2 பேர் சுட்டுக்கொலை; வெள்ளை கொடி காட்டி உடலை எடுத்துச்சென்ற பாகிஸ்தான்

ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். ஹாஜிபுர் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் உயிரிழந்த 2 வீரர்களின் உடலை வெள்ளை கொடி காட்டி பாகிஸ்தான் எடுத்துச் சென்றது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஒரு மாதமாக ஜம்மு காஷ்மீரில் போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவுகள் தற்போது தளர்த்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த அறிவிப்புக்கு பிறகு பாகிஸ்தான் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. மேலும், சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டு வந்தது. இதனால் எரிச்சல் அடைந்த பாகிஸ்தான் சர்வதேச போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லைப்பகுதியில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு, இந்திய பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இருப்பினும், காஷ்மீரில் மிக பெரிய தாக்குதலை நடத்த பயங்கரவாத முகாம்கள் பாகிஸ்தானில் அமைக்கப்பட்டிருப்பதாகவும், பாகிஸ்தானை சேர்ந்த 40 தீவிரவாதிகள் எல்லைத் தாண்டி காஷ்மீருக்குள் ஊடுருவி உள்ளதாகவும்  உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனை தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீர் எல்லை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ஹாஜிபுர் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இந்த பதில் தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இவர்களின் உடலை பாகிஸ்தான் வெள்ளைகொடி காட்டி எடுத்துச் சென்றனர்.

Related Stories: