ஸ்பெயினின் ஏற்பட்ட கடும் மழை வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்படும் மக்களின் இயல்பு வாழ்க்கை

ஸ்பெயின்: ஸ்பெயினின் ஏற்பட்ட கடும் மழை வெள்ளத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் லாஸ் அல்காஸாரஸ் நகரம் வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளது. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து உள்ளதால் மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். வெள்ள நீரை வெளியேற்ற முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் வெள்ள நீர் வடியாததால் கார்கள் நீருக்குள் மூழ்கி கிடக்கின்றனர்.

ஆங்காங்கே சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மருத்துவ குழுவினர் விரைந்து செயலாற்றி வருவதாக லாஸ் அல்காஸாரஸ் நகர நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். வெள்ளம் காரணமாக அப்பகுதியில் உள்ள இரு விமான நிலையங்கள் ரயில் நிலையங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு முடங்கி போய் உள்ளதால் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: