ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மேகன் ஷீட் ‘ஹாட்ரிக்’ விக்கெட்: இரண்டாவது முறையாக சாதனை

ஆன்டிகுவா: ஆஸ்திரேலிய மகளிர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மேகன் ஷீட் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் பெற்றதன் மூலம் இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட் பெற்ற முதல் பெண் என்ற வரலாற்று சாதனையை  பெற்றார்.ஆஸ்திரேலிய மகளிர் அணி, வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியுடன் மூன்று ஒரு நாள் போட்டி, இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்கு கடந்த 5ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு சுற்றுபயணம் சென்றது. இதில் முதல் இரண்டு ஒரு  நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை மிகப்பெரிய இமாலய இலக்குடன் ஆஸ்திரேலியா வென்று தொடரை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து மூன்றாவது ஒருநாள் போட்டி ஆன்டிகுவாவில் நடந்தது. இதில்  டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மேகன் ஷீட், தனது துல்லியமான  வேகப்பந்து வீச்சால் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை துவம்சம் செய்தார். ஏற்கனவே ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் பெற்ற முதல் பெண் என்ற சாதனையை பெற்றிருந்தார். தற்போது இரண்டு முறை  ஹாட்ரிக் விக்கெட் எடுத்த பெருமையையும் மேகன் ஷீட் பெற்றார்.

இந்த ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 50 ஓவர்கள் முழுமையாக விளையாடி 180 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா அணி 31.1 ஓவர்களில் 182 ரன்கள் எடுத்து 8  விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களான அலிஸா ஹீலி (61), கேப்டன் மெக் லானிங் (58) அரைசதங்கள் அடித்து வெற்றி இலக்கை துரத்தி ஆஸ்திரேலியா அணி மூன்று ஒரு நாள் போட்டியிலும் வெற்றி  பெற்று ஒயிட்வாஷ் (3-0) செய்தது.

Related Stories: