வருமான வரி வழக்குகளை குறைக்க அரசு புது முடிவு

புதுடெல்லி:  மத்திய நேரடி வரிகள் வாரியம், வருமான வரித்துறை அலுவலகங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘‘வருமான வரி வழக்குகள் குவிவதைத் தடுக்கபுதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, வரி ஏய்ப்பு செய்ய வேண்டும் என்ற குற்ற நோக்கம் இல்லாமல் இருந்தாலோ, வருமான வரி கணக்கு தாக்கல் செய்யத் தவறினாலோ, டிடிஎஸ் பிடித்தம் செய்த பணத்தில் 25 லட்சம் வரையில் தாமதமாக செலுத்தினால் அல்லது  தவறினால் இனிமேல் சாதாரணமாக குற்ற வழக்குகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என கூறப்பட்டுள்ளது

Related Stories: