இந்திய பத்திரிக்கையாளருக்கு ரமோன் மகசேசே விருது

மணிலா: இந்திய பத்திரிகையாளர் ரவீஷ் குமார் உட்பட 5 பேர் 2019ம் ஆண்டுக்கான ரமோன் மகசேசே விருதை நேற்று பெற்றனர். ஆசியாவின் மிக உயரிய விருதாக ரமோன் மகசேசே விருது கருதப்படுகின்றது. பிலிப்பைன்ஸ் நாட்டின் மூன்றாவது அதிபராக இருந்த ரமோன் டெல் பியாரியோ மகசேசேவின் நினைவாக ஆண்டுதோறும் மக்களுக்கு சிறந்த சேவையாற்றுபவர்களுக்கு இந்த விருது வழங்கி கவுரவிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டுக்கான விருது, இந்திய பத்திரிகையாளரான என்டிடிவியின் மூத்த செய்தி ஆசிரியர்  ரவீஷ்குமார் உட்பட 5 பேருக்கு அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் ரவீஷ்குமாருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. விருது பெற்ற ரவீஷ்குமார் கூறுகையில், “இந்திய ஊடகங்கள் பிரச்னைக்குரிய நிலையில் உள்ளன. இது ஏதேச்சையானது அல்ல உருவாக்கப்பட்டது” என்றார். மியான்மரை சேர்ந்த கோ ஸ்வீ வின், தாய்லாந்தை சேர்ந்த அன்ங்கானா நீலாபைஜித், பிலிப்பைன்ஸ்சை சேர்ந்த ரேமுன்டோ புஜன்தே கயாப்யாப் மற்றும் தென்கொரியாவை சேர்ந்த ஜாங் கி ஆகியோரும் ரமோன் மகசேசே விருதை  பெற்றுக்கொண்டனர்.

Related Stories: