திக்விஜய் சிங் - சிங்கார் மோதல் பற்றி விசாரணை நடத்த சோனியா உத்தரவு

போபால்: மத்திய பிரதேசத்தில் திக்விஜய் சிங்  - வனத்துறை அமைச்சர் உமங் சிங்கார் இடையே ஏற்பட்டுள்ள மோதல் பற்றி விசாரிக்கும்படி கட்சியின் ஒழுங்குமுறை கமிட்டிக்கு சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்திடமே மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் போட்டியில் இவரிடம் தோற்ற ஜோதிராதித்ய சிந்தியா, அப்பதவியை தட்டி பறிக்க முயற்சிக்கிறார்.

இதனிடையே, பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இம்மாநில வனத்துறை அமைச்சரும், ஜோதிராதித்ய சிந்தியாவின் நெருங்கிய நண்பருமான சிங்கார், திக்விஜய் சிங் திரை மறைவில் இருந்து கமல்நாத் அரசை இயக்கி வருவதாக குற்றம்சாட்டினார்.

முன்னதாக, பாஜ, பஜ்ரங் தள் தலைவர்களுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடர்பு இருப்பதாக திக்விஜய் சிங் குற்றம்சாட்டிய போதும் சிங்கார் கருத்து தெரிவித்தார். இதையடுத்து. அவர்களிடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. இது பற்றி சோனியாவிடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மோதல் பற்றி விசாரிக்கும்படி காங்கிரஸ் ஒழுங்குமுறை கமிட்டியின் தலைவர் ஏ.கே. அந்தோணிக்கு சோனியா உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: