தாக்கா: வங்கதேச அணியுடனான டெஸ்ட் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.சாட்டோகிராம், அகமது சவுத்ரி ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 342 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய வங்கதேசம், முதல் இன்னிங்சில் 205 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் கேப்டன் ரஷித் கான் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.137 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான், 3ம் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 238 ரன் எடுத்திருந்தது. நேற்று நடந்த 4ம் நாள் ஆட்டத்தில் அந்த அணி 260 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இப்ராகிம் ஸத்ரன் 87, அஸ்கர் ஆப்கன் 50, அப்சர் ஸசாய் 48*, ரஷித் கான் 24 ரன் விளாசினர். வங்கதேச பந்துவீச்சில் ஷாகிப் ஹசன் 3, மிராஸ், தைஜுல், நயீம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.