பிறைகுடியிருப்பு தேவி முத்தாரம்மன் கோயில் கொடைவிழா

உடன்குடி: உடன்குடி அருகே பிறைகுடியிருப்பு தேவி முத்தாரம்மன், ஸ்ரீ மகாமாரியம்மன், ஸ்ரீ உஜ்ஜைனி மாகாளி அம்மன், ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோயில் வருடாந்திர கொடை விழா கடந்த செப்2ம் தேதி காலை 5.30மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து யாகசாலையில் புனித நீர் எடுத்து சுவாமிகளுக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் கோயில் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு கொடி மரத்திற்கு பல்வேறு வகையான அபிஷேகமும் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது. நண்பகல் 12மணிக்கு குரு பூஜையை தொடர்ந்து அன்னதானம் நடந்தது. மாலை 7மணிக்கு நாடு நலம் பெற வேண்டி ஏராளமான பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடந்தது.

செப்.3ம் தேதி அதிகாலை 2மணிக்கு சிறப்பு பூஜையுடன் கும்பம் தெருவீதி வருதல், நண்பகல் 2மணிக்கு சிறப்பு பூஜையுடன் கும்பம் தெரு வீதி வருதல் நடந்தது. செப்.4ம்தேதி அதிகாலை 2மணிக்கு சிறப்பு பூஜையுடன் அன்னை முத்தாரம்மன் அன்னவாகனத்தில் பவனி வருதல், கும்பம் தெருவீதி உலா, முளைப்பாரி ஊர்வலம் ஆகியவை நடந்தது. காலை 7மணிக்கு பால் பூஜை, நண்பகல் 2மணிக்கு மஞ்சள் பெட்டி பவனி வருதல், மாலை 6மணிக்கு சுவாமிகள் மஞ்சள் நீராடுதல், இரவு 7மணிக்கு கூழ் வார்த்தல், தொடர்ந்து தீபாராதனை நடந்தது. செப்.5ம்தேதி அதிகாலை 2மணிக்கு சிறப்பு பூஜையுடன் அன்னை முத்தாரம்மன் சிம்மவாகனத்தில் பவனி வருதல், நண்பகல் 2மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 8மணிக்கு கலைநிகழ்ச்சி, தொடர்ந்து வில்லிசை நடந்தது.

செப்.6ம் தேதி அதிகாலை 2மணிக்கு சிறப்பு பூஜையுடன் முத்தாரம்மன் தேரில் பவனி வருதல், காலை 7மணிக்கு கொடியிற க்க சிறப்பு பூஜை, காலை 9மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல், நள்ளிரவு 12மணிக்கு ஓத்தைப்பனை சுடலைமாடன் சுவாமிக்கு சிறப்பு பூஜையுடன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் நடந்தது. ஏற்பாடுகளை தர்மகர்த்தா திருப்பாப்பு, தலைவர் சிவந்திமுருகேசன், செயலாளர் சிவராஜா, பொருளாளர் ராஜசேகரன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories: