மான்செஸ்டர்: இங்கிலாந்து அணியுடனான 4வது டெஸ்டில், ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 44 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது.ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 497 ரன் குவித்து டிக்ளேர் செய்தது (126 ஓவர்). ஸ்டீவன் ஸ்மித் அதிகபட்சமாக 211 ரன் விளாசினார். லாபஸ்ஷேன், பெய்ன் 58, ஸ்டார்க் அரை சதம் அடித்தனர். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து, 3ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 125 ரன் எடுத்திருந்தது. பர்ன்ஸ் 62, ரூட் 47 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 141 ரன் சேர்த்தது. பர்ன்ஸ் 81 ரன் (185 பந்து, 9 பவுண்டரி), கேப்டன் ஜோ ரூட் 71 ரன் (168 பந்து, 10 பவுண்டரி) விளாசி ஹேசல்வுட் வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.