ஜூனியர் சூப்பர் கிங்ஸ் வெற்றிவேல் அசத்தல் சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில், பள்ளிகளுக்கு

இடையிலான 6வது ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி20 கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் தமிழ்நாடு முழுவதும் 88 பள்ளிகள் பங்கேற்றுள்ளன. சென்னை களத்தில் 16 பள்ளிகள் விளையாடின. இதன் காலிறுதிப் போட்டி ஒன்றில் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்திய பள்ளியும்,  கெருகம்பாக்கம் பத்ம சேஷாத்ரி மில்லினியம் பள்ளியும் மோதின. முதலில் விளையாடிய பீட்ஸ் பள்ளி, 20 ஓவரில் 6 விக்கெட் இழந்து 150 ரன் சேத்தது. அந்த அணியின் வெற்றிவேல் 21 பந்துகளில் 41* ரன் எடுத்தார்.பத்ம சேஷாத்ரி பள்ளியின் ஓம் நிதின், பிராதம் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். தொடர்ந்து விளையாடிய பத்ம சேஷாத்ரி பள்ளி, 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 96 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் பீட்ஸ் பள்ளி 54 ரன் வித்தியாசத்தில் வென்றது. அசத்தலாக விளையாடிய வெற்றிவேல், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories: