சென்னை: எம்சிசி-முருகப்பா தங்க கோப்பை ஹாக்கப் போட்டி தொடரில் நடப்பு சாம்பியனான ஐஓசி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. பி பிரிவில் நேற்று நடந்த முதல் லீக் போட்டியில் மத்திய தலைமை செயலகம்- பஞ்சாப் சிந்து வங்கி அணிகள் மோதின. தொடர்ந்து 3 போட்டிகளில் டிரா செய்திருந்த மத்திய தலைமை செயலக அணி 4-2 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் சிந்து வங்கியை வீழ்த்தியது. அதனையடுத்து புள்ளிப் பட்டியில் 6 புள்ளிகளுடன் 2வ இடம் பிடித்த மத்திய தலைமை செயலகம் அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த பிரிவில் ஏற்கனவே இந்திய கப்பற்படை அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டது. அதேபோல் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் ஏ பிரிவில் உள்ள இந்தியன் ஆயில் கார்பரேஷன்(ஐஓசி)-பஞ்சாப் நேஷனல் வங்கியும் விளையாடின.
