போதையில் வாகனம் ஓட்டியதால் வழக்கு போலீசுடன் வாக்குவாதம் மின்வாரிய ஊழியர் கைது

திருவொற்றியூர்: மணலி அருகே மது போதையில் வாகனம் ஓட்டியதால் வழக்குப்பதிவு செய்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.மணலி, சிபிசிஎல் தொழிற்சாலை முன்பாக மணலி போக்குவரத்து உதவி ஆய்வாளர் எழில் தலைமையில் காவலர் ஜெகன் ஆகியோர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த எண்ணூரை சேர்ந்த மின்வாரிய ஊழியர் மணிமாறன் (45) என்பவரை நிறுத்தி சோதனை செய்தபோது மது போதையில் பைக் ஓட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மணிமாறன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertising
Advertising

இதையடுத்து, மணிமாறன் அதேப்பகுதியில் வசிக்கும் சக ஊழியரான பன்னீர்செல்வம் (50) என்பவருக்கு போன் செய்து உடனடியாக அங்கு வரவழைத்துள்ளார். அவர் வந்த பிறகு போலீசாரிடம், ‘‘வழக்குப்பதிவு செய்யக்கூடாது’’ என்று, கூறி வாக்குவாதம் செய்துள்ளனர். இதுகுறித்து மணலி போலீசில் உதவி ஆய்வாளர் எழில் கொடுத்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பன்னீர்செல்வத்தை கைது செய்தனர்.

Related Stories: