நாமக்கல் சட்டக்கல்லூரி திறப்பு விழா தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் புதிதாக 217 கோர்ட்டுகள் துவக்கம்: அமைச்சர் சண்முகம் தகவல்

நாமக்கல்:  நாமக்கல்-திருச்சி ரோட்டில் உள்ள டான்சி நிறுவன வளாகத்தில் அரசு சட்டக்கல்லூரி துவக்க விழா நேற்று நடைபெற்றது. நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம் வரவேற்றார். விழாவில், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது: தமிழகத்தில் நீதிமன்றங்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 8 ஆண்டுகளில் 440 புதிய நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும், தமிழகம் முழுவதும் 217 நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப தகுதியான இளம் வழக்கறிஞர்களை உருவாக்கும் நோக்கில், அரசு சட்டக்கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. அரசு சட்டக்கல்லூரிகளில் சட்டப்படிப்பு படித்து முடிக்க ₹6,310 தான் கட்டணமாக பெறப்படுகிறது. கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் சட்டப்படிப்பு படிக்கவே, அரசு சட்டக்கல்லூரிகளை திறந்து வருகிறது. நாமக்கல் அரசு சட்டக்கல்லூரிக்கு, இன்னும் ஓராண்டில் ₹80 கோடி மதிப்பில் உலக தரத்துக்கு இணையான புதிய கட்டிடம் கட்டி கொடுக்கப்படும். நூலகம், வகுப்பறை, கலையரங்கம் என அனைத்தும் ஏசி வசதியுடன் அமைத்து தரப்படும். இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

Related Stories: