கொத்தடிமையாக நடத்தப்படும் 15வது பட்டாலியன் போலீசார்

வேலூர் அடுத்த சேவூரில் தமிழ்நாடு சிறப்புக்காவல் படையின் 15வது பட்டாலியன் முகாம் அமைந்துள்ளது. இதில் `ஏ’’ முதல் `எப்’’ வரை 6 கம்பெனிகள் உள்ளன. ஒரு கம்பெனிக்கு 80 பேர் உள்ளனர். இங்குள்ள போலீசார் சிறை பாதுகாப்பு,  விஐபி எஸ்காட், கைதிகள் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லும் போது பாதுகாப்பு அளிப்பது உள்ளிட்ட பணிகளுக்கு தினமும் பிரித்து அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதில் வேலூர் மத்திய சிறை பாதுகாப்புக்கும் இங்கிருந்துதான் போலீசார்  செல்கின்றனர்.

மொத்தம் 80 பேர் சிறைச்சாலை பாதுகாப்பு பணிக்கு செல்ல வேண்டிய இடத்தில் 59 பேர் மட்டுமே செல்கின்றனர். இதனால் 2 மணி நேரம் பணி செய்துவிட்டு ஓய்வு எடுக்க வேண்டிய போலீசார் தொடர்ந்து ஓவர் டைம் பணி  செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்களாம். அதோடு சிறையில் பணி செய்துவிட்டு உறங்குவதற்கு கூட இடவசதியின்றி கொசுக்கடியில் அவதிப்படுவதாகவும், சரியான நேரத்திற்கு உணவும் கிடைப்பதில்லை என்றும், உடல்நிலை பாதிக்கப்பட்டு விடுமுறை கேட்டாலும் கிடைப்பதில்லை  என்றும், காவல்துறையில் நாங்கள் கொத்தடிமை போல் நடத்தப்படுகிறோம் என்றும் சிறை பாதுகாப்பு பணியில் ஈடுபடும் 15வது பட்டாலியன் போலீசார் புலம்புகின்றனர்.

Related Stories: