அமெரிக்காவுக்கு உரிய பதிலடி கொடுக்க ரஷ்யா ராணுவம் தயாராக வேண்டும்: ரஷ்ய அதிபர் புதின்

ரஷ்யா: அமெரிக்கா மேற்கொண்ட ஏவுகணை சோதனைக்கு சரியான பதிலடி கொடுக்க தயாராகுமாறு ரஷ்ய ராணுவத்திற்கு அந்நாட்டு அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து ரஷ்ய அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்ட ரஷ்ய அதிபர் புதின் விவாதித்ததாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்க ஏவுகணை சோதனையை அடுத்து ரஸ்யாவின் பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்தும், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுப்பது குறித்தும் கூட்டத்தில் ஆராயப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுகிழமை அன்று அமெரிக்கா ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியது.

Advertising
Advertising

 அந்நாட்டின் மேற்கு கடற்கரையில் ஏற்பட்ட சோதனையில் 500 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை ஏவுகணை சரியாக தாக்கியதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. அமெரிக்கா- ரஷ்யா இடையிலான குறுகிய தூர ஏவுகணை தடுப்பு ஒப்பந்தத்தின் மூலம் இது போன்ற சோதனைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியதை தொடர்ந்து அமெரிக்கா ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது. இதனிடையே அமெரிக்க ஏவுகணை சோதனை குறித்து ரஸ்யாவும், சீனாவின் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் முறையிட்டனர்.

இது தொடர்பான பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்காவின் சோதனைகளுக்கு ரஷ்யா கண்டனமும் தெரிவித்தது. இதே போன்று ரஷ்யா உடனான கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைக்கான தடை ஒப்பந்தத்திலிருந்தும் அமெரிக்கா விலகியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்காவின் இந்த தன்னிச்சையான நடவடிக்கை மிண்டும் ஆயுத போட்டிக்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளார். ரஷ்ய நாடு மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டிய கடமை அரசுக்கு உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related Stories: