அமெரிக்கா: காஷ்மீரி சிறப்பு சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தை சர்வதேச பிரச்சனையாக்க ஐநா.பாதுகாப்பு கவுன்சில் அளிக்கப்பட்ட புகார் நிராகரிக்கப்பட்டதை அடுத்து இது உள்நாட்டு விவகாரம் தான் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சீனாவை தவிர இதர 14 உறுப்பு நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மூடிய அறைக்குள் ரகசியமாக பாகிஸ்தான் கோரிக்கை குறித்து விவாதம் நடத்திய ஐநா.பாதுகாப்பு கவுன்சில் இரு நாடுகளும் சுமுக தீர்வு காணும்படி அறிவுறுத்தியுள்ளது.