ஆசிய யு-23 வாலிபால் இந்திய அணிக்கு ரொக்கப்பரிசு

சென்னை: மியான்மரில் நடைபெற்ற  ஆசிய அளவிலான யு-23 வாலிபால்  போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கு 17 லட்சம் ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய வாலிபால் கூட்டமைப்பு தலைவர் வாசுதேவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மியான்மரில் 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான  3வது ஆசிய  வாலிபால் போட்டி  சமீபத்தில் நடைபெற்றது.

Advertising
Advertising

இந்தப் போட்யில் இந்திய அணி 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது. இதையொட்டி இந்திய அணி வீரர்கள், நிர்வாகிகளுக்கு தலா ₹1 லட்சம் வீதம், மொத்தம் 17 லட்சம் ரொக்கப்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வீரர்களை கவுரவிக்கும் வகையில், பாராட்டு விழா ஏற்பாடு செய்து இந்த ரொக்கப் பரிசையும் வழங்க உள்ளோம்.

Related Stories: