மாவட்ட வாலிபால் சென்னை பெண்கள் பள்ளி சாம்பியன்

சென்னை: சென்னை மாவட்ட கைப்பந்து  சங்கம் சார்பில்  பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டி நடைபெற்றது. எழும்பூர் ஹாக்கி விளையாட்டு அரங்கில் மாணவிகளுக்கான போட்டியும், அரும்பாக்கம் டிஜி வைஷ்ணவா கல்லூரியில்  மாணவர்களுக்கான போட்டியும் நடந்தது. இரு பிரிவிலும் தலா 12 பள்ளிகள் பங்கேற்றன. பெண்களுக்கான இறுதிப் போட்டியில்  சென்னை பெண்கள் மேனிலைப் பள்ளி (ராட்லர்) - எழும்பூர் பிரசிடென்சி பெண்கள் மேனிலைப் பள்ளி மோதின.  இதில்  சென்னை பெண்கள் பள்ளி  24-26, 25-20, 25-21  என்ற செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை பெற்றது.  சிவகாசி இந்து நாடார் பள்ளியை வீழ்த்தி   மயிலாப்பூர் லேடி சிவசாமி பெண்கள் பள்ளி 3வது இடம் பிடித்தது. மாணவர்கள் பிரிவில்   முகப்பேர் வேலம்மாள் பள்ளி  முதலிடத்தையும், சேது பாஸ்கர் மேனிலைப் பள்ளி 2வது இடத்தையும் வென்றன. செயின்ட் பீட்ஸ் மேனிலைப் பள்ளி 3வது இடத்தையும், கோலபெருமாள் மேனிலைப்பள்ளி 4வது  இடத்தையும் பிடித்தன.

Advertising
Advertising

Related Stories: