ஜோத்பூர் - கராச்சி இடையிலான தார் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ரத்து : பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

ஜெய்ப்பூர்: பாகிஸ்தானின் கராச்சி -  ராஜஸ்தானின் ஜோத்பூர் இடையே இயக்கப்படும் தார் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை இந்தியா நேற்று ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பாகிஸ்தானின் கராச்சி - ராஜஸ்தானின் ஜோத்பூர் இடையே இயக்கப்பட்டு வந்த தார் எக்ஸ்பிரஸ் ரயிலை ரத்து செய்வதாக கடந்த 9ம் தேதி பாகிஸ்தான் அறிவித்தது.  

இந்நிலையில், இந்தியாவில் இருந்து இயக்கப்படும் தார் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை மத்திய அரசும் நேற்று ரத்து செய்தது.  இந்த ரயில், ஜோத்பூரில் உள்ள பாகாட் கி கோதி ரயில் நிலையத்தில் இருந்து கராச்சியின் முனாபா வரை இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலில் பாகிஸ்தான் செல்வதற்காக 45 பேர் முன்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: