மாநகராட்சி பெண் ஊழியர் கொலையில் திருப்பம் சொத்துக்காக தங்கையை கொன்றேன்: கைதான சகோதரி வாக்குமூலம்

சென்னை: சைதாப்பேட்டையில் மாநகராட்சி பெண் ஊழியர் கொலை செய்யப்பட்டதில் திருப்பமாக சொத்தை அடைய  மாமனார்  மூலம் ஆள் வைத்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட சகோதரி வாக்குமூலம் அளித்துள்ளார். சைதாப்பேட்டையை சேர்ந்தவர் ஜெயா (35). மாநகராட்சி சாலை பணியாளர். விதவை. இவருக்கு சொந்தமான 4 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார்.கடந்த திங்கள்கிழமை ஜெயா இறந்துவிட்டதாக அவரது மூத்த சகோதரி தேவி சைதாப்பேட்டை  போலீசில் தெரித்தார். போலீசார் சந்தேக மரணம் என விசாரித்து வந்தனர். இதற்கிடையே பிரேத  பரிசோதனை அறிக்கையில் கழுத்து நெரித்து, மூச்சு திணறி இறந்தது தெரிந்தது. எனவே தேவியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது சொத்துக்காக தங்கையை ₹10 ஆயிரத்துக்கு மாமனார் மூலம் ஆள்வைத்து கொலை செய்தது தெரிந்தது. எனவே தேவி அவரது மாமனார் எத்திராஜ், நண்பர் சரவணன் ஆகியோரை  போலீசார் கைது செய்தனர்.தேவி அளித்த வாக்குமூலம்: தேவி குடும்பத்துடன் செங்கல்பட்டில் வசித்து வருகிறார்.

தங்கை ஜெயா வீட்டு வாடகை, மாநகராட்சி சம்பளம் என வசதியாக வாழ்ந்து வந்தார். ஜெயாவுக்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் கள்ளக்காதல்  இருந்தது. இதற்கிடையே தேவி மகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தபோது நகை செலவுகளை ஏற்பதாக ஜெயா கூறியுள்ளார். ஆனால் கள்ளக்காதலனை 2வது திருமணம் செய்ய முடிவு ெசய்ததால் தேவிக்கு பண உதவி செய்வதை  நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த தேவி தனது தங்கை இரண்டாவது திருமணம் செய்தால் 4 வீடுகளும் கிடைக்காது என நினைத்து மாமனார் எத்திராஜிடம் ₹10 ஆயிரம்      கொடுத்து ஜெயாவை தீர்த்துக்கட்ட கூறியுள்ளார். அதன்படி  கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெயா வீட்டில் தூங்கியபிறகு திட்டமிட்டப்படி எத்திராஜ் தனது நண்பர் சரவணனுடன் வந்துள்ளார். உடனே தேவி யாருக்கும் தெரியாதபடி உள்ளே அழைத்து சென்று தூங்கிக்கொண்டிருந்த ஜெயாவின் கால்களை  அழுத்தி பிடிக்க எத்திராஜ் மற்றும் சரவணன் ஆகியோர் தலையணையால் ஜெயாவின் முகத்தில் அழுத்தியும் கழுத்தை நெரித்தும் துடிக்க துடிக்க கொலை செய்துவிட்டு வந்துவிட்டனர். பிறகு மறுநாள் திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு தேவி, தனது தங்கைக்கு ஏற்கனவே வயிற்றில் அறுவை சிகிச்சை ெசய்து இருந்ததால் வயிற்று போக்கால் இறந்ததாக அருகில் உள்ளவர்கள், போலீசாரிடம் கூறி நம்ப வைத்துள்ளார்.  சிசிடிவி காட்சிகள் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையால் எங்களது நாடகம் முடிவுக்கு வந்தது. இவ்வாறு தேவி கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: