ஈரோடு ஆசனூர் வனப்பகுதி தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

ஈரோடு: ஈரோட்டை அடுத்த ஆசனூர் வனப்பகுதி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளார். ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஆசனூர் வனப்பகுதி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. வனப்பகுதியில் தற்பொழுது பரவலாக  சாரல் மழை பெய்து வருவதன் காரணமாக  வனப்பகுதியில் குளிர்ச்சி நிலவி வருவதால் யானைகள் கூட்டம் கூட்டமாக தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களில் முகாமிட்டுள்ளன.

Advertising
Advertising

மாலை நேரங்களில் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து நடமாடுகின்றன. இதனால் சில சமயங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் வனபகுதி வழியாக எழும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் வேன், லாரி ஓட்டுனர்கள் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்திவருகின்றனர். யானைகள் கூட்டமாக இருக்கும் போது கூச்சலிடுவதையும்,போட்டோ மற்றும் வீடியோ எடுப்பதை தடுக்க வேணும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: