சார்ஜாவில் இருந்து சென்னைக்கு 34 லட்சம் தங்க நகைகள் கடத்தல் : 2 உள் நாட்டு பயணிகள் கைது

சென்னை: சார்ஜாவிலிருந்து திருவனந்தபுரம் வழியாக சென்னை வரும் ஏர் இண்டியா விமானம் நேற்று காலை 8.00 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சோர்ந்த கமரூதீன் (27), அவரது உறவுப்பெண் ரகீலா (23) ஆகிய 2 பேர் வந்தனர். சந்தேகத்தின்ேபரில் அவர்களை நிறுத்தி அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது அவர்கள் நாங்கள் உள் நாட்டு பயணிகள் எங்களை ஏன் விசாரிக்கிறீர்கள் என்று கேட்டனர்.நீங்கள் சர்வதேச விமானத்தில் வருகிறீர்கள் சந்தேகப்பட்டால் உங்களை சோதனை செய்ய எங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று இருவரிடம் சோதனை செய்தனர்.

Advertising
Advertising

அப்போது ரகீலாவின் கைப்பையில் தங்க செயின்கள் மோதிரங்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதோடு கமருதீன் உள் ஆடைக்குள் கனமான இரண்டு செயின்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இருவரிடம் இருந்து 800 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு 34 லட்சம். இதையடுத்து இருவரையும் சுங்க அதிகாரிகள் கைது செய்ததுடன். சர்ஜாவில் இருந்து நகைகளை கடத்தி வந்தவரை தேடிவருகின்றனர்.

Related Stories: