பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் பலி

பாகிஸ்தான்: பாகிஸ்தானின் தேரா இஷமாயில் கான் என்ற ஊரில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 4 போலீஸ் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டதில் மேலும் 24 பேர் காயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் சோதனைச்சாவடியில் இருந்த போலீசை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து தேரா இஷமாயில் கானில் உள்ள மருத்துவமனையில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: