இன்டேன் எல்பிஜி பாட்லிங் தொழிற்சாலையில் ரூ.10 கோடியில் புதைக்கப்பட்ட 900 மெ.டன் சேமிப்பு கலன்: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது

திருச்சி: திருச்சி இன்டேன் எல்பிஜி பாட்லிங் தொழிற்சாலையில் ரூ.10 கோடி மதிப்பில் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட 900 மெட்ரிக் டன் அளவுள்ள சேமிப்பு கலன் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. ஐஓசி தென் மண்டல பொது மேலாளர் சிதம்பரம் மற்றும் ஐஓசி எல்பிஜி தமிழக பொது மேலாளர் ராஜேந்திரன் ஆகியோர் நேற்று கூட்டாக அளித்த பேட்டி: ஐஓசியின் திருச்சி இன்டேன் எல்பிஜி பாட்லிங் தொழிற்சாலை இனாம்குளத்தூர் கிராமத்தில் 60 ஏக்கர் நிலப்பரப்பில் 1996ல் நிறுவப்பட்டது.

இந்த ஆலையின் மொத்த கூட்டுக் கொள்ளளவு 1,000 மெட்ரிக் டன் ஆகும். இது 3 மவுன்டட் புல்லட் சேமிப்பு கலன்கள் மற்றும் ஒரு ஹார்ட்டன் ஸ்பியர் சேமிப்பு கலன் ஆகியவற்றில் சேமிக்கப்படுகிறது. இந்த பாட்லிங் தொழிற்சாலையில் கூடுதலாக சேர்க்கப்படுகின்ற 900 மெட்ரிக் டன் சேமிப்பு வசதிக்கான சட்ட அனுமதிகள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த சேமிப்பு கலன் பயன்பாட்டு வந்தவுடன் 4 நாட்கள் வரை தடை இல்லாமல் இயங்கும். இந்த தொழிற்சாலை நாளொன்றுக்கு 34,000 எல்பிஜி சிலிண்டர்களை நிரப்புகின்றது. இது வருடத்துக்கு 1,20,000 மெட்ரிக் டன் எல்பிஜி ஆகும்.

திருச்சி தொழிற்சாலை தனது 110 இன்டேன் எல்பிஜி விநியோகஸ்தர்கள் நெட்வொர்க்கின் மூலமாக திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், கரூர், அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, தேனி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு எல்பிஜி சிலிண்டர்களை சப்ளை செய்கிறது. இந்த ஆலையில் ஒரு மணி நேரத்துக்கு 3,000 எல்பிஜி சிலிண்டர்கள் வீதம் நிரப்பப்படுகிறது. இந்த தொழிற்சாலை 2.75 மெ.வா ஆற்றலுடைய சோலார் மின்னுற்பத்தி கருவியையும் உடையதாகும்.

இந்த தொழிற்சாலை 14.2 கி வீட்டு உபயோக சிலிண்டர்களுடன், 19 கி மற்றும் 19கி நானோ கட் சிலிண்டர்களையும், 42.5 கி மற்றும் 425 கி சிலிண்டர்களையும் வர்த்தக பயன்பாட்டுக்காக நிரப்புகின்றது. தமிழகத்திலேயே திருச்சி பாட்லிங் ஆலை ஒன்றில் தான் 5கி சிலிண்டர் நிரப்பும் வசதியும் உள்ளது. திருச்சி ஆலையை போல நாடு முழுவதும் அமைந்துள்ள ஐஓசி 91 பாட்லிங் ஆலைகள் நாளொன்றுக்கு 2 மில்லியன் சிலிண்டர்களை வழங்கி, நெதர்லேன்டின் எஸ்ஹெச்வி கேஸ் கம்பெனிக்கு அடுத்து உலக அளவில் இரண்டாவது மிகப்பெரிய எல்பிஜி மார்க்கெட்டிங் கம்பெனியாக உள்ளது.

பிளாண்டில் ஒரு இடத்தில் நெருப்பு வந்தவுடன் 30 செகன்ட்டில் தண்ணீர் பீய்ச்சி அடித்து 5 நிமிடத்தில் தீ அணைக்கப்பட்டது. இது போன்ற அமைப்பு பிளான்ட் முழுவதும் இருக்கிறது. மிகவும் பாதுகாப்பான பிளாண்ட். மாதம் ஒரு முறை தீத்தடுப்பு ஒத்திகை நடக்கிறது. எல்பிஜி பாட்லிங் பிளான்ட் பொருத்தவரை செகன்ட் கணக்கு வைத்து வேலை பார்க்கிறோம். எமர்ஜென்சி எனில் 3 செகன்ட்லில் அனைத்தும் ஸ்டாப் ஆகிவிடும். பிளாண்ட் 1000 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட சேமிப்புகலன் இருக்கிறது. மேலும் தரையில் புதைக்கப்பட்ட 900 டன் சேமிப்பு கலன் 10 கோடியில் பணி முடிக்கப்பட்ட அடுத்த மாதம் முதல் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

இது தவிர ரூ.10 கோடியில் 2.7 மெ.வா சோலார் பிளாண்ட் நிறுவப்பட உள்ளது. ஒரு நாளைக்கு 2.7 லட்சம் சிலிண்டர்கள் தமிழகத்தில் விநியோகிக்கப்படுகிறது. சேலம், பாண்டியில் 28 ஆயிரம் சிலிண்டர் கூடுதலாக நிரப்பப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சம் 24 மணி நேரத்திற்குள் சிலிண்டர்களை டெலிவரி செய்துவிடுவோம். மேலும் வீடுகளில் இன்டேன் சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர்களிடம் ரசீது உள்ள சிலிண்டர் கட்டணம் மட்டும் கொடுத்தால் போதும். கூடுதலாக கட்டணம் கேட்டால் ஏஜென்சி நிறுவனத்திற்கு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர். திருச்சி எல்பிஜி பிளாண்ட் துணை பொதுமேலாளர் பாலசுப்பிரமணியன், மண்டல மேலாளர் பாபு நரேந்திரா, எல்பிஜி ஏரியா அலுவலக முதுநிலை மேலாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

தீத்தடுப்பு ஒத்திகை:

இனாம்குளத்தூர் ஐஓசி திருச்சி இன்டேன் எல்பிஜி பாட்லிங் தொழிற்சாலையில் நேற்று தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி செய்து காண்பிக்கப்பட்டது. அதன்படி 5ம் எண்ணில் உள்ள அப்லோடிங் யூனிட்டில் தீப்பிடிப்பது போலவும், அதை அனைத்து காட்டும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

Related Stories: