இந்தோனேசியா ஓபன் பைனலில் சிந்து

ஜகார்தா: இந்தோனேசிய ஓபன் சூப்பர் 1000 பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார். அரை இறுதியில் உலகின் 3வது ரேங்க் வீராங்கனை சென் யூ பெய்யுடன் (சீனா) நேற்று மோதிய பி.வி.சிந்து 21-19 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார்.  இரண்டாவது செட்டிலும் அதிரடியைத் தொடர்ந்த அவர் 21-19, 21-10 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்து பைனலுக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 46 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான இறுதிப் போட்டியில், ஜப்பான் வீராங்கனை அகானே யாமகுச்சியுடன் சிந்து பலப்பரீட்சையில் இறங்குகிறார். யாமகுச்சியுடன் மோதிய ஆட்டங்களில் 10-4 என முன்னிலை வகிக்கும் சிந்து, கடைசியாக விளையாடிய 4 முறையும் வெற்றியை வசப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

Related Stories: