இந்தியர்கள் யுஏஇ செல்ல உடனடி விசா

துபாய்: இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இந்தியர்கள் சுற்றுலா விசாவில் ஐக்கிய அரபு அமீரகம் செல்கின்றனர். இந்நிலையில் இந்தியர்களுக்கான சிறப்பு சலுகையாக உடனடியாக விசா வழங்கும் வசதி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் அமீரகத்திற்கு வரும் இந்தியாவை சேர்ந்தவர்கள் விசிட் விசாவில் செல்ல விரும்புவோர் நுழைவுக் கட்டணமாக 100 திர்ஹம்சும், 20 திர்ஹம்ஸ் சேவை க‌ட்டணமும் செலுத்தி விசாவை பெற்றுக் கொள்ளலாம். கூடுதலாக‌ 14 நாட்கள் தங்குவதற்கு மற்றும் ஒருமுறை காலநீட்டிப்பு செய்வதற்கான புதுப்பிப்பு கட்டணமாக 250 திர்ஹம்ஸ் செலுத்த வேண்டும். விசிட் விசாவை ஒருமுறை புதுப்பிக்கும் பயணிகள், கூடுதலாக 28 நாட்கள் தங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மட்டுமில்லாமல் இங்கிலாந்து உள்ளிட்ட‌ ஐரோப்பிய யூனியன் விசா வைத்திருப்போர் ஐக்கிய அரபு அமீரகத்தின் உடனடி விசிட் விசா பெற தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertising
Advertising

Related Stories: