மேற்குகிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி தேர்வில் தாமதம் : கேப்டன் தேர்வு, தோனி ஓய்வு சர்ச்சையால் சிக்கல் நீடிப்பு

 மும்பை: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் தேர்வை பிசிசிஐ ஒத்திவைத்தது. மும்பையில் இன்று நடைபெற இருந்த கூட்டத்தை ஒத்திவைத்துள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.கேப்டன் தேர்வு, தோனி ஓய்வு போன்ற சர்ச்சையால் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இந்திய கிரிக்கெட்  அணி வீரர்களை தேர்வு செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளது. ஒரு நாள் போட்டி, 20/20, டெஸ்ட் போட்டி என்று பல போட்டிகளில் இந்திய அணி பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் 20 ஓவர் போட்டி ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அணியை தேர்வு செய்வதற்கான பிசிசிஐ ஆலோசனைக் கூட்டம் திடீரென வரும் ஞாயிற்றுக் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பைத் தொடருக்கான வீரர்கள் தேர்வில் எழுந்த விமர்சனமே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. உலகக் கோப்பைப் போட்டி தோல்வியில் அணியில் அதிரடி மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தேர்வு விதிமுறைகளில் செய்யப்பட்ட சில மாற்றங்களும் அணித் தேர்வு ஒத்திவைப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Related Stories:

>