ரூ.27 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கத்தின் விலை : சவரன் ரூ.26,952க்கும் விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.27 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.3,369க்கும், சவரன் ரூ.26,952க்கும் விற்பனையாகிறது. அதேபோல், சென்னையில் சில்லறையில் ஒரு கிராம் வெள்ளி விலை 70 காசுகள் அதிகரித்து ரூ.44.50க்கு விற்பனையாகிறது.

Advertising
Advertising

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்திய சந்தையிலும் ஆபரண தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிந்தபோதும், மத்திய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி  வரியை 12.5 சதவீதமாக உயர்த்தியதால், சென்னையில் ஆபரண தங்கம் கடந்த 5ம் தேதி ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்து, வர்த்தக முடிவில் சவரனுக்கு 504 அதிகரித்து 26,232க்கு விற்கப்பட்டது. பின்னர் கடந்த 11ம் தேதி, அமெரிக்க  பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டாம் என முடிவு செய்ததால் தங்கம் சவரனுக்கு 448 அதிகரித்து 26,640க்கு விற்கப்பட்டது.

 இதன்பிறகு, தங்கம் விலையில் நேற்று பெரும் மாற்றம் ஏற்பட்டது. அதாவது சென்னையில் ஆபரண தங்கம் நேற்று சவரனுக்கு 304 உயர்ந்து, 26,656க்கு விற்பனையானது.இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.27 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.3,369க்கும், சவரன் ரூ.26,952க்கும் விற்பனையாகிறது. இதன் மூலம் தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.  இதுகுறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க கவுரவ செயலாளர் சாந்தகுமார் கூறுகையில், ‘‘அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியே தங்கம் விலை உயர்வுக்கு காரணம். இதனால் சர்வதேச சந்தையில்  ஒரு டிராய் அவுன்ஸ் (31.103 கிராம்) 1,443 டாலரை தாண்டி விட்டது. இது உள்ளூர் சந்தையிலும் எதிரொலித்துள்ளது’’ என்றார்.

22 கேரட் தங்கத்தின் விலை:

இன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 296 ரூபாய் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.3,369 ஆகவும், சவரனுக்கு ரூ.26,952 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை:

இன்று ஒரு கிராம் வெள்ளி விலை 70 காசுகள் உயர்ந்து ரூ. 44.50 ஆக உள்ளது.

Related Stories: