விழுப்புரம் அருகே 2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு: 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை

விழுப்புரம்: விழுப்புரம் அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தென்மேற்குளம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கணவனை பிரிந்து வாழ்கிறார். மேலும் இவர் புதுச்சேரி கோரிமேடு பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்யும் போது அவருக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதால் அந்த நபருடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது. இதனால் தனது இரண்டு குழந்தைகளையும் தாய் வீட்டில் அவரது பராமரிப்பில் விட்டுவிட்டு கோரிமேடு காந்திநகர் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி அந்த பெண் வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில் இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் குழந்தை பிறந்துள்ளதன் காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனை அடுத்து அந்த பெண் அம்மாவிடம் உள்ள தனது குழந்தைகளை பார்ப்பதற்காக கடந்த மாதம் கிராமத்திற்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து அப்போது அந்த இரு சிறுமிகளும் தனது தாயிடம் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் செய்திகளை கூறியுள்ளனர். இதனால் தனது இரண்டு குழந்தைகளையும் தன்னுடனே புதுச்சேரி அழைத்து வந்து அங்குள்ள அரசு பள்ளியில் அவர்களை சேர்த்துள்ளார். இந்த நிலையில் பள்ளிக்கு சென்ற 8 வயது சிறுமி திடீரென்று மயங்கி விழுந்துள்ளார்.

மேலும் இவரது சகோதரியும் சோர்வுடன் காணப்பட்டதால் உடனே அவர்களை சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். இதை தொடர்ந்து அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் பாலியல் தொந்தரவு காரணமாக காயம் ஏற்பட்டதில் சகோதரிகள் மயங்கி விழுந்திருப்பதாக தெரிவித்தனர். தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: