பெரு நாட்டின் முன்னாள் அதிபர் அலெஜாண்ட்ரோ அமெரிக்காவில் கைது: நாடு கடத்தும் அமெரிக்கா முயற்சி

வாஷிங்டன்:  பெரு நாட்டின் முன்னாள் அதிபர் அலெஜாண்ட்ரோ டொலிடோ அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2001-2006 காலக்கட்டத்தில், பெரு நாட்டு அதிபராக இருந்த அலெஜாண்ட்ரோ டொலிடோ மீது பல்வேறு குற்றவழக்குகள் உள்ளன. குறிப்பாக பெரு நாட்டுடன் பிரேசிலை இணைக்கும் நெடுஞ்சாலைக்கான அரசுப் ஒப்பந்தப் பணிகளை வழங்கியதில், பிரேசில் கட்டுமான நிறுவனத்திடம், 137 கோடி ரூபாயை அலெஜாண்ட்ரோ லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.

Advertising
Advertising

இந்த வழக்கில் அவரை முக்கிய குற்றவாளியாக குறிப்பிட்டு போலீசார் தேடி வந்த நிலையில், அவர் அமெரிக்காவுக்கு தப்பி ஓடினார். இதனை அறிந்த பெரு நாட்டு அரசு, அலெஜாண்ட்ரோவை உடனடியாக நாடுகடத்தும்படி அமெரிக்காவிடம் முறையிட்டது. அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் பயனாக, நேற்று அமெரிக்கா போலீசார் அலெஜாண்ட்ரோவை கைது செய்தனர். தற்போது அவரை பெருவுக்கு நாடு கடத்தும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Related Stories: