தமிழக போக்குவரத்துத்துறைக்கு ரூ.600 கோடியில் 2000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்: சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: சட்டசபையில் இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானிய கோரிக்கை மீது, விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பேரவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு துறைசார்ந்த அதிகாரிகள் பதில் அளித்து வந்தனர். இதனை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேரவை விதி 110வது விதியின் கீழ் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். அதில் கூறி இருப்பதாவது;

* தமிழக போக்குவரத்துத்துறைக்கு ரூ.600 கோடியில் 2000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்.

* 32 மாவட்டங்களில் உலகத்தரம் வாய்ந்த தீவிர சிகிச்சை மையம் ரூ.49.1 கோடியில் அமைக்கப்படும்.

* சேலம் சுகாதார மாவட்டத்தை இரண்டாக பிரித்து ஆத்தூரில் புதிய சுகாதார மாவட்டம் உருவாக்கப்படும்.

* எனது மருத்துவமனை, எனது பெருமை என அரசு மருத்துவமனை புதுப்பொலிவுடன் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* காஞ்சிபுரம் ஆரணியில் ரூ.120 கோடியில் புற்றுநோய் மேலாண்மை மையம் அமைக்கப்படும்.

* ஈரோடு அரசு மருத்துவமனை ரூ. 67.76 கோடியில் உயர் சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும்.

* 296 துணை சுகாதார நிலையங்களுக்கு ரூ.79 கோடியில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.

* ரூ. 40 கோடியில் மறுவாழ்வு மையம் ஏற்படுத்தப்படும்; தற்கொலை இறப்புகளை தவிர்க்க ரூ. 6 கோடியில் கட்டணமில்லா இலவச சேவை மையம் அமைக்கப்படும்.

* சென்னை கே.கே.நகர் அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில் ரூ.40 கோடியில் மறுவாழ்வு மையம் அமைக்கப்படும்.

* சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு ஒரு லீனியர் ஆக்ஸிலேட்டர் கருவி ரூ.16 கோடியில் வழங்கப்படும்.

* கரூர், தருமபுரி, தேனி, தூத்துக்குடி, தலைமையிடமாக கொண்டு புதிய பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் உருவாக்கப்படும்.

* ஒன்றியங்களை பிரிப்பதன் மூலம் கொள்முதல் செய்யப்படும் பால், நாளொன்றுக்கு 33 லட்சம் லிட்டதிலிருந்து 35 லட்சமாக உயரும்.

* ஆவின் பால் விற்பனை 22.5 லட்சம் லிட்டரிலிருந்து 25 லட்சம் லிட்டராக உயரும் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: