நியூயார்க்: பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் போலவே, கூகுள் நிறுவனமும் புதியதாக SHOELACE என்ற சமூக வலைதளத்தை உருவாக்கியுள்ளது. ஆர்குட்-க்கு பிறகு கூகுள் பிளஸ் சமூக வலைதள சேவையை கூகுள் அறிமுகம் செய்தது. ஆனால், அது பெரிய அளவில் வெற்றிபெறாததை அடுத்து, தற்போது SHOELACE என்ற சமூக வலைதளம் மூலம் கூகுள் களமிறங்கியுள்ளது. SHOELACE சமூக வலைதளம் போன்று தான் என்றாலும் மொபைல் செயலி வடிவில் மட்டுமே கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட சீன சமூக வலைதள செயலியான Helo, ShareChat போன்றவற்றுக்கு போட்டியாக SHOELACE இருக்கும் என்று கூறப்படுகிறது.