2 வாரத்தில் 3வது தங்கம்: ஹிமா தாஸ் சாதனை

செக் குடியரசின் கிளாட்னோ நகரில் நடைபெற்ற சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவர் 23.43 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்தார். முன்னதாக, போலந்தில் ஜூலை 2 மற்றும் 7ம் தேதிகளில் நடைபெற்ற தடகள சாம்பியன்ஷிப் தொடர்களிலும் ஹிமா தாஸ் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். சர்வதேச தடகளத்தில் 2 வாரத்துக்குள்ளாக 3 தங்கப் பதக்கங்களை வென்று அபார சாதனை படைத்துள்ள ஹிமாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Advertising
Advertising

Related Stories: