அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.3.25 லட்சம் கோடி திரட்ட அரசு முடிவு

புதுடெல்லி: சில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள தனது பங்குகளை 40 சதவீதம் அளவுக்கு குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இதுவரையில் இல்லாத அளவுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.3.25 லட்சம் கோடி நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் தனியார்மயமாக்கும் நடவடிக்கை விறுவிறுப்பு அடையும் என்று 2 உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.நாட்டின் நிதி பற்றாக்குறையை இந்த நிதி திரட்டல் மூலம் ஈடுசெய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தபோது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான முதல் 5 ஆண்டு ஆட்சி காலத்தில் பொதுத்துறை நிறுவனங்களில் அரசு முதலீடு செய்திருந்த பங்குகளை விற்று 40.92 பில்லியன் டாலர் திரட்டியது குறிப்பிடத்தக்கது. கடந்த 2009-2014ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் 14.52 பில்லியன் டாலர்தான் நிதி திரட்டப்பட்டது. அதைவிட மூன்று மடங்கு அதிகமாக பா.ஜ. ஆட்சியில் நிதி திரட்டப்பட்டுள்ளது.

Related Stories: