நேருக்கு நேர்...

உலக கோப்பையில் இரு அணிகளும் 9 முறை மோதியுள்ளதில் இங்கிலாந்து 4 முறையும், நியூசிலாந்து 5 முறையும் வெற்றியை வசப்படுத்தி உள்ளன. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 90 முறை மோதியுள்ள நிலையில் நியூசிலாந்து 43-41 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது (2 டை, 4 ரத்து). பரிசு மழை! நடப்பு உலக கோப்பை தொடரில் மொத்தப் பரிசுத் தொகையாக ₹70 கோடி வழங்கப்படுகிறது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு முதல் பரிசாக கோப்பையுடன் ₹28 கோடி வழங்கப்படும். 2வது இடத்துக்கு ₹14 கோடி கிடைக்கும். அரை இறுதியில் தோற்ற இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு தலா ₹5.61 கோடி, லீக் சுற்றுடன் வெளியேறிய 6 அணிகளுக்கு தலா ₹70 லட்சம் கிடைக்கும். இது தவிர ஒவ்வொரு வெற்றிக்கும் ₹25 லட்சம் வழங்கப்படும்.

Related Stories: